“விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்” – முத்துப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்

மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் முத்துப்பேட்டையில் போராட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைமை ஏற்று போராட்டத்தை நடத்தியது. முத்துப்பேட்டை தபால் நிலையம் முன்பு இந்த போராட்டம் நடந்தது.
இது புதிய பேருந்து நிலையாயத்தில் இருந்து ஊர்வலமாக தொடங்கி, பழைய பேருந்து நிலையம் சென்று, மன்னார்குடி சாலை வழியாக தபால் நிலையத்தை அடைந்தனர்.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் முருகையன், ஒன்றிய செயலாளர் உமேஷ் பாபு, நகர செயலாளர் மார்க்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.