முத்துப்பேட்டை அருகே கடலில் தவறி விழுந்த மீனவர் பலி

முத்துப்பேட்டை அருகே கடலில் தவறி விழுந்த மீனவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முத்துப்பேட்டை அருகே இடும்பாவனம், பகுதியை சேர்த்த 54 வயதான மீனவர் சேகர். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, இரு மகன்கள் உள்ளனர்.

கடந்த 4 நாட்களுக்கு முன்னர், மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்க முனாங்காடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து படகில் சென்றார்.

லகூன்- அலையாத்திக்காடுகள் நிறைந்த மேல கடைசித் தீவு பகுதியில் வலையை கடலில் வீசிய சேகர் திடீரென தடுமாறி கடலில் விழுந்தார்.

அதனை அடுத்து நீரில் மூழ்கிய அவரை மீட்ட மீனவர்கள், இடும்பாவனம் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அவர் முன்னரே இறந்துவிட்டதாக அங்குள்ள மருத்துவர்கள் சோதித்து கூறினர்.

Back to top button