முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலம் முன்னிட்டு கொடி ஒத்திகை ஊர்வலம்: நூற்றுக்கணக்கான போலீசார் அணிவகுப்பு

முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலம் ஆண்டுதோறும் நடைபெறுவது அனைவரும் அறிந்ததே.
அதே போல, விநாயகர் ஊர்வலம் நெருங்கும் வேளையில் காவல்துறை சார்பாக கொடி ஒத்திகை அணிவகுப்பும் (Flag march) நடைபெறும்.
அதன் அடிப்படையில் இந்த ஆண்டு கொடி ஊர்வல ஒத்திகை (Flag march) இன்று ஆக. 28 ஆம் தேதி நடைபெற்றது.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P. சுரேஷ் குமார் அவர்களின் தலைமையில் நடந்த ஒத்திகை ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் கலந்து கொண்டனர்.
புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒத்திகை, பிரில்லியண்ட் பள்ளி வரை நடைபெற்றது.
விநாயகர் ஊர்வலம் வரும் வரும் செப்.06 ஆம் தேதி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.