முத்துப்பேட்டையில் ஆற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

முத்துப்பேட்டை ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முத்துப்பேட்டை களஞ்சியம் ஆட்டோ ஓட்டுநர் அப்துல் வாகித், இவரின் மகன் 18 வயதுமிக்க முகம்மது ஜியாத். இவர் கோவை கற்பகம் கல்லூரியில் B.COM முதலாமாண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று செப்.10 முத்துப்பேட்டை அருகே உள்ள சுந்தரம் பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது.
இதில் அவர் ஆற்று நீரில் மூழ்கி இறந்ததாகவும் சொல்லப்படுகிறது. பின்னர் அவரின் உடல் கைப்பற்றப்பட்டு முத்துப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
அங்குள்ள மருத்துவர்கள் சோதித்ததில் அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
முத்துப்பேட்டை பகுதியில் கல்லூரி இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.