முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

முத்துப்பேட்டையில் நாளை மறுநாள் செப்.06 ஆம் தேதி விநாயகர் ஊர்வலம் நடைபெற உள்ளது.
அதனை முன்னிட்டு முத்துப்பேட்டை நகர பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவீரமாக நடந்து வருகிறது.
பட்டுக்கோட்டை சாலை, செக்கடி குளம் முதல் ரயில்வே கேட் வரை உள்ள சாலையோர பகுதிகளில் இரும்பு தகர சீட் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு மேடை மற்றும் சாலைகளை பள்ளமேடு இல்லாமல் சரிசெய்யும் பணிகளும் நடந்துள்ளன.