முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலம்: இஸ்லாமியர் வீடுகளின் சுவரில் ஏறி அடாவடி

முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலம் நேற்று (செப்.06) நடைபெற்றது.
இதில் பங்களா வாசல், முகைதீன் பள்ளி அருகே ஊர்வலம் சென்றதும், ஊர்வலக்காரர்களில் ஒருவர் முஸ்லீம் வீட்டில் எறிகி மிரட்டும் CCTV வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
இவ்வளவு போலீஸ் பாதுகாப்பு இருந்தும் பிரச்சனைக்குரிய பகுதிகளில் உள்ள முஸ்லீம் வீடுகளில் எகிறி அடாவடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமுமுக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து கேள்வி எழுப்பிய முத்துப்பேட்டை தமுமுக நகர தலைவர் A. முகம்மது அலீம், சம்மந்தப்பட்ட நபர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முத்துப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
புகாருடன் அது தொடர்பான CCTV காட்சிகளையும் இணைத்து புகார் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
CCTV VIDEO: