முத்துப்பேட்டை அருகே இளைஞரை தாக்கிய நபர் கைது – மேலும் ஒருவருக்கு வலைவீச்சு

முத்துப்பேட்டை அருகே சொத்து பிரச்சனை காரணமாக இளைஞரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரமங்காடு, வீரன்கோவில் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரின் மகன் 27 வயதுமிக்க சூரியமூர்த்தி என்ற இளைஞர்.
அதே தெருவை சேர்ந்த 54 வயதான குமார் என்ற நபருக்கும் சூரியமூர்த்திக்கும் நீண்ட காலமாக சொத்து தொடர்பான பிரச்சினை இருந்து வந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஆக.24 அன்று இருவருக்கும் தகராறு மூண்டது. இதில் குமார் மற்றும் அவரின் மகன் 21 வயதுமிக்க தினேஷ்குமார் ஆகியோர் இணைந்து சூரியமூர்த்தியை கடுமையாக தாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் அவர்கள் கட்டையால் அடித்து அவரை தாக்கியுள்ளனர். இதில் கடுமையான காயம் ஏற்பட்ட சூரியமூர்த்தி திருத்துறைப்பூண்டி அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், புகாரை பெற்ற முத்துப்பேட்டை போலீஸ் குமாரை கைது செய்தது. தலைமறைவான தினேஷ்குமாரை போலீசார் தேடிவருகின்றனர்.