திருவாரூர் மாவட்டத்தில் கனமழை: மழை நீரில் மூழ்கிய பயிர்கள் – கவலையில் விவசாயிகள்

தமிழகத்தின் தலைநகர் சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை வாட்டி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை தவிர தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பரவலாக பெய்து வருகிறது.
குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை, குடவாசல், நன்னிலம், கூத்தாநல்லூர், கொரடாச்சேரி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் 2வது நாளாக மழை நீடித்து வருகிறது.
இதனால் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.
அறுவடைக்காக தயார் நிலையில் இருந்த பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கியதால் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.