முத்துப்பேட்டையில் தொடரும் மழை: ஊட்டி போல குளுகுளுவென மாறிய நகரம்!

முத்துப்பேட்டையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சில்சில்.. கூல்கூல்.. என்ற வானிலை நிலவி வருகிறது.
கடந்த 2 தினங்களாக முத்துப்பேட்டை பகுதியில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக முத்துப்பேட்டை பகுதியே குளுகுளுவென உள்ளது.
குறிப்பாக வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விடாது பெய்யும் மழை காரணமாக இன்று (செப்.01) திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.