முத்துப்பேட்டை அருகே தற்கொலை செய்துகொண்ட ஊழியர் – நிலப்பிரச்னையால் ஏற்பட்ட பரிதாபம்

முத்துப்பேட்டை வட்டம் ஓவரூர் வெள்ளாங்கால் கிராமத்தை சேர்ந்த ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதியை சேர்ந்த 50 வயதான ராஜராஜன் என்பவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கும் நிலப்பிரச்சினை இருந்துள்ளது.
தன்னுடைய நிலத்தை ராஜராஜன் வேறு ஒருவருக்கு விற்பனை செய்ததாக சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில், அதனை முன்னரே குத்தகைக்கு வாங்கிய செல்வம் அதில் உழவு செய்துள்ளார்.
இதனை அடுத்து, யாரை கேட்டு இங்கு சாகுபடி செய்கிறாய் என்று ராஜராஜன் கேட்டுள்ளார். இதில் கோபமடைந்த செல்வம் தரப்பு ஆட்கள் ராஜராஜன் மற்றும் அவரின் சகோதரர் ராஜவர்மன் ஆகிய 2 பேரையும் தகாத வார்த்தைகளால் ஏசியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த ராஜராஜன் விஷத்தை குடித்து உயிரை மாய்த்தார், இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.